Advertisment

“சாதிகளை உருவாக்கியது சாமியார்கள் தான்...” - ஆர்.எஸ்.எஸ் தலைவர்  

rss leader mohan bhagwat Castes were created by priest

“சாதிகளை கடவுள் உருவாக்கவில்லை;சாமியார்கள்தான் உருவாக்கினார்கள்” என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகம் பகவத் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

மஹாராஸ்டிராமாநிலம், மும்பையில் புனித ஷிரோம் ரோஹிதாஸின் 647வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “கடவுளுக்கு முன் அனைவரும் சமம். உண்மையில் சாதிகளை கடவுள் உருவாக்கவில்லை. சாமியார்கள் தான் சாதிகளை, பிரிவினைகளை உருவாக்கினார்கள். எல்லா வேலையும் சமுதாய நலனுக்காகவே செய்யப்படும் போது அதில் உயர்வு தாழ்வு மட்டும் எங்கிருந்து வருகிறது. இந்தியாவில் தற்போது நிலவும் வேலையின்மைக்கு இந்த எற்றத்தாழ்வு மனப்பான்மைதான் முக்கிய காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe