முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் தற்போது டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோஹன் பக்வாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.