ghyng

Advertisment

இந்தியாவில் சமாதானத்தையும், நல்லொழுக்கத்தையும் கெடுப்பதற்காக 'தேசிய விரோத' சக்திகள் செயல்படுகின்றன என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், 'ஆர்.எஸ்.எஸ் எப்போதும் ஒருவருடைய துன்பத்திற்காக கடவுளிடம் பிரார்த்திக்காது, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க மட்டுமே பிரார்த்தனை செய்யும். ஆனால் தேசிய எதிர்ப்பு சக்திகள் சமாதானத்தையும், நல்லொழுக்கத்தையும் அழிக்கவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முயற்சி செய்கின்றன. மேலும் ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இந்த நாளில் ஒரு உறுதிமொழியை ஆர்.எஸ்.எஸ் சார்பில் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்' என கூறினார்.