Advertisment

செப்.30 வரை மட்டுமே ரூ.2000 நோட்டுகள் செல்லும்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Rs.2000 notes will be valid till September 30 only; RBI Notification

Advertisment

வரும் செப்டம்பர்30 ஆம் தேதி வரை மட்டுமே ரூ.2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத்திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்.30 தேதி வரை ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதிபிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து தற்போது ரூ.2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

reservebank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe