அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ரூ. 908 கோடி மோசடி; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

Rs 908 crore scam during AIADMK rule; Enforcement action

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, TANGEDCO அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் அமலாக்கத்துறையினர் கடந்த 24 ஆம் தேதி சவுத் இந்தியா கார்ப்பரேஷன் மற்றும்TANGEDCO நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மின்வாரிய அதிகாரிகளிடம் இருந்தும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனையில்,சவுத் இந்தியா கார்ப்பரேஷன்வசமிருந்த ரூ.360 கோடி நிரந்தர வைப்பு நிதி தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த வழக்கில், 2011ல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் விசாகப்பட்டிணத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குநிலக்கரி இறக்குமதி செய்யரூ.1267 கோடி அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.TANGEDCO அரசு நிறுவனம்,சவுத் இந்தியா கார்ப்பரேஷன்க்குஒப்பந்தம் கொடுத்துள்ளது. இதில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் இறக்குமதி செய்த செலவில்போலியாக கணக்குக் காட்டி ரூ.239 கோடிமட்டுமே செலவு செய்து மீதமுள்ள ரூ.908 கோடியை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் TANGEDCO அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்தனர்.

அப்போது பணியாற்றி தற்போது ஓய்வில் உள்ள 10 அதிகாரிகள் மீதுலஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். தீவிரமாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சவுத் இந்தியா கார்ப்பரேஷன்வசமிருந்த ரூ.360 கோடி நிரந்தர வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.

admk coals
இதையும் படியுங்கள்
Subscribe