Advertisment

குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்க ஆளுநர் ஒப்புதல்

rs 1000 aid for women family heads puducherry

Advertisment

புதுச்சேரியில் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் அரசின் எந்த விதமான மாதாந்திர உதவித் தொகையும் பெறாத வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய புதுச்சேரி அமைச்சர் தேனி சி.ஜெயகுமார், அரசின் எந்த விதமான மாதாந்திர உதவித் தொகையும் பெறாத வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும்கோப்பில்,துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துவிட்டதாகத்தெரிவித்திருக்கிறார்.

governor woman Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe