ஸ்வீட் பாக்ஸுடன் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் - சர்ச்சையில் சிக்கிய பொம்மை

'Rs 1 lakh bribe with sweet box'- Controversial toy

கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பத்திரிகையாளர்களுக்கு அம்மாநில முதல்வர் இனிப்பு பெட்டியுடன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியதாக காங்கிரஸ் நிர்வாகி வெளியிட்டுள்ள புகார் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுஜிவாலா, “கர்நாடகாவில் பாஜக முதல்வர் பொம்மையின் தலைமையிலான அரசின் ஊழல் வெளிப்படையாகவே இந்த முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தீபாவளியை ஒட்டி பத்திரிகையாளர்களுக்கு இனிப்பு பெட்டியுடன் ஒரு லட்சம் ரூபாயை முதல்வர்பொம்மை லஞ்சமாக கொடுத்துள்ளார். பாஜக ஆட்சியில் பணி நியமனம், பதவி உயர்வு, ஒப்பந்தம் என அனைத்து விவகாரங்களுக்கும் லஞ்சம் கேட்பது வாடிக்கையாகிவிட்டது”என குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக ரன்தீப் சிங் சுஜிவாலா டிவிட்டர் பக்கத்திலும் கர்நாடக முதல்வர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

congress karnataka
இதையும் படியுங்கள்
Subscribe