Advertisment

மருத்துவமனையில் சேவல் வைத்தால் உடல் நலமாகும்!!!

Roosters offered to God in Goa hospital

கடந்த செவ்வாய்க்கிழமை, கோவா சுகாதாரத்துறைஅமைச்சர் விஸ்வஜித் ரானேகோவாவில் உள்ளஅரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், நோயாளிஉடல் நலம் பெற வேண்டுமென்று மருத்துவமனையின் வெளியே சேவலை கூண்டில் அடைத்து வைத்துள்ளது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும்,அதனை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர்பத்திரிகையாளரிடம்கூறுகையில், "சேவல்களை உடனடியாக உரியவர்களிடம்ஒப்படைக்கவும், இனி இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் நான் இங்குள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் கூறியுள்ளேன். ஏன்னென்றால் இங்கு பல நோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர் முக்கியமானவி.ஐ.பி.களும் வருகின்றனர். சுகாதாரமின்றி இருந்தால் எப்படி. இதை இப்படியே விட்டால்பசு மற்றும் எருமைகளைக்கூட கட்டுவார்கள் போல" என்று கூறினார்.

Advertisment

இதற்கு முன்பு கோவா முதல்வர் மனோகர்பாரிக்கர்வயிற்றுவலியால் அவதிப்பட்டபொழுது, லீலாவதி மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு,அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது இதனை பார்த்துவிட்டு"நோயாளி குணமடையவேண்டிமருத்துவமனையில் சேவலைக் கூண்டில் அடைத்துவைத்து பின்னர் நலமானதும் எடுத்து செல்வதுஎன்றவழக்கம் மிகவும் ஆச்சரியமாகவும், புரியாமலும் உள்ளது" என்றார். அதன் பிறகு அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

hospital Kerala rooster
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe