rohingya

வடமாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்யா மக்கள், தற்போது ரயில்களின் மூலம் கேரளாவுக்கு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களை பிடிக்க போலிஸ் மும்முறமாக செயல்பட்டு வருகிறது. ரயிலில் வரும் அவர்கள் வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து வருபவர்கள். ரோஹிங்யா மக்களை கேரளாவுக்கு செல்வதற்குள் பாதிவழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா, உள்ளிட்ட 6 மாநிலங்களில் சுமார் 40,000 ரோகிங்கியாக்கள் ஊடுருவியுள்ளனர்.ரயிலில் ரோகிங்கியாக்கள் இருந்தால் அவர்களை உடனடியாக போலீசிடம் ஒப்படைப்பதோடு உரிய நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளனர்.