Advertisment

பணமோசடி வழக்கு; ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்...

dgfdfgd

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. 19 லட்சம் பவுண்ட் செலவில் அவர் லண்டனில் வீடு வாங்கியது தொடர்பான இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராபர்ட் வதேரா சார்பில், ' ராபர்ட் வதேரா இந்திய சட்டத்தை மதிக்கும் ஒரு சிறந்த குடிமகன். வேண்டுமென்றே அவர் மீது இப்படி ஒரு குற்றம் சாட்டப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிணை தொகையாக அவர் 1 லட்சம் ரூபாய் கட்ட உத்தரவிட்டு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. மேலும் வரும் 6 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

congress robert vadra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe