/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/robert-priya-std.jpg)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு மற்றும் பெட்ரோலிய துறை ஒப்பந்தங்களில் பணம் பெற்றது,19 லட்சம் பவுண்ட் செலவில் அவர் லண்டனில் வீடு வாங்கியது தொடர்பான இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. பிணைக்கான தொகையாக 1 லட்சம் ரூபாய் கட்ட உத்தரவிட்டு நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. மேலும் இன்று மாலை 4 மணிக்கு அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று சரியாக 4 மணியளவில் ராபர்ட் வதேரா விசாரணைக்காக ஆஜரானார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)