style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதுச்சேரி அண்ணாநகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (72 வயது), ஹேமலதா (வயது 65) ஆகிய இருவரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இவர்களுக்கு 2 மகன் மற்றும் 1 பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்த போது நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்தமர்மநபர்கள் தலையணையால் அழுத்தி மூச்சு திணறடித்து தம்பதிகள் இருவரையும் கொலை செய்துள்ளனர். மேலும் வீட்டிலிருந்த நகை பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த இரட்டை கொலை, கொள்ளை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணையும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறை விசாரணையும் நடைபெற்றது. கொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் உறவினர் என்று கூறப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் சம்பவம் நடந்த பகுதி முதல்வர் நாராயணசாமியின் நெல்லித்தோப்புக்குள் உள்ளதால் நாராயணசாமி கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.