Advertisment

பட்ட பகலில் பெண்ணை தாக்கி நகை கொள்ளை... வைரலாகும் வீடியோ!

பெங்களூரில் பெண்ணை ஆயுதத்தால் தாக்கிவிட்டு, மங்கி கேப் அணிந்த 2 பேர் தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கே.ஆர்.புரம் 6ஆவது சந்திப்பு பகுதியில் அன்னை தெரசா பள்ளி அருகே கடைக்கு சென்றுவிட்டு, பெண் ஒருவர் மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது பின்பக்கமாக இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். அவர்களில் பின்புறத்தில் இருந்த ஒருவன் ஆயுதத்தால் தலையில் தாக்கவே, அந்தப்பெண் கீழே சரிந்து விழுந்தார். இதையடுத்து அவரின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அவன் பறித்து சென்றான். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதைவைத்து, வழிப்பறி நபர்களை கே.ஆர்.புரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

Advertisment

Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe