Advertisment

மூன்று மாநிலங்களை மிரட்டிய உ.பி. கொள்ளையர்கள்! கைது செய்த தனிப்படை! 

The robbers who threatened three states Arrested

தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நான்குபேரை ஆந்திரா காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Advertisment

தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒரு கும்பல் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்தது. இது தொடர்பான புகார்கள் மூன்று மாநில காவல்துறையிலும் பதிவாகியிருந்தது. சமீபத்தில், ஆந்திரா மாநிலம், வாரங்கால் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தக் கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்தது. இந்தத் தொடர் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து ஆந்திர மாநிலம் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர்.

Advertisment

இந்நிலையில் இன்று, இந்தத் தொடர் கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்டுவந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஆந்திர மாநிலம், வாரங்கால் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், அந்தக் கும்பலிடம் இருந்து 14 கிலோ கஞ்சா, கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து வாரங்கால் காவல் ஆணையர் ரங்கநாத் கூறுகையில், “வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்பர் குரேஷி(34), கபில் ஜாதாவோ(30, முகமது ஷெரீப்(56) மற்றும் முகமது ஜாத்(25) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளோம். இந்தக் கும்பல் மீது 32 வழக்குகள் உள்ளன.

கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2.38 கிலோ தங்கம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான 14 கஞ்சா பொட்டலங்கள், நான்கு போன்கள், நான்கு போலி ஆதார் கார்டுகள், பிரான்சில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி ஒன்று, துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம்.

மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிக்கும் இந்தக் கும்பல், வாரங்கால், அடிலாபாத், பெங்களூரு மற்றும் ஆந்திரா இன்னும் பல இடங்களிலும் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தனர்” என்று தெரிவித்தார்.

police karnataka Andrahpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe