Robber Caught on CCTV

திருட்டு சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அவ்வப்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தும்.அதேநேரம் சில திருட்டு சம்பவங்கள் நூதன முறையில் இருக்கும். திருடச் சென்ற வீட்டிலேயே சமைத்து சாப்பிட திருடன், வீட்டில் திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு வந்த திருடன் என இப்படி பல சம்பவங்கள் நூதன முறையில் நிகழ்ந்துள்ளன.

Advertisment

அப்படி ஒரு சம்பவம் ஜெய்ப்பூரில் நிகழ்ந்துள்ளது. கோவிலில் கொள்ளையடிக்க வந்த திருடன் ஒருவன் சாமி சிலையைக் கண்டதும்கையெடுத்து பக்தி பரவசத்தோடு கும்பிட்டுவிட்டு, பின்னர் அங்கிருந்த பொருட்களை திருடிவிட்டு கோவிலின் கதவை மூடிச் செல்லும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட பக்தி பரவச கொள்ளையனை சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.