riyaz naikoo eliminated

Advertisment

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி ரியாஸ் நய்கூ இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நேற்று நள்ளிரவு ரியாஸ் நய்கூ புல்வாமாவின் பைக்போரா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாகத் தகவல் வெளியான நிலையில், துரிதமாகச் செயல்பட்ட ராஷ்டிரிய ரைபிள்ஸ் (ஆர்.ஆர்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் உள்ளூர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு ஆகியோர் அந்தக் கிராமத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளுக்கும் சீல் வைத்தனர். பின்னர் அப்பகுதியில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் ரியாஸ் நய்கூ கண்டறியப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.