Advertisment

பெட்ரோல் விலை அதிரடியாக உயரப்போகும் அபாயம்!

தெ.சு. கவுதமன்

Risk of sudden rise in petrol price!!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைப் பொறுத்தவரைமுன்பெல்லாம் ஒரு சிலமாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கக்கூடிய முறையே இருந்து வந்தது. கச்சாஎண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் தான் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்படும். ஆனால் 2017ஆம் ஆண்டுஜூன் முதல்பெட்ரோலிய விலை நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன்இனிதினசரிகச்சா எண்ணெய் விலையேற்ற இறக்க சூழலுக்கேற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்றஇறக்கங்கள் இருக்குமென்று அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அறிவித்தார்.

Advertisment

இந்த அறிவிப்பின் மூலம்பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல்சிறிது சிறிதாகவே உயர்த்தப்படுமென்றும்கச்சா எண்ணெய் விலை குறையும்போதுஅதற்கேற்ப விலை குறையவும் செய்யுமென்றும் தெரிவித்தார். இதனால்நுகர்வோர்களுக்கு நல்லதொரு பயனளிப்பதாக இருக்குமென்றும் கூறினார்.அப்போதைய காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால்பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மக்களைப் பெரிதும் பாதிக்காததாக இருந்தது.

Advertisment

ஆனால் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில்கச்சா எண்ணெய்விலை இதைவிடக் குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல்உயர்த்திக்கொண்டே சென்றார்கள். அதேபோல், கொரோனா லாக்டௌன் காலத்தில்கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குப் போனபோதும்பெட்ரோல், டீசல்விலையைக் குறைக்கவில்லை. கொரோனாவுக்குப் பின்னரும்கூட கச்சா எண்ணெய்விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதுகுறித்துமத்திய அரசைக் கேள்வியெழுப்பும் போதெல்லாம், இதெல்லாம் எங்கள் கைகளில்இல்லை; எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவெடுக்குமென்று கூறினார்கள். ஆனால்எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டாலோ, இதெல்லாம் பெட்ரோலியஅமைச்சகத்திடம் தான் கேட்க வேண்டுமென்று கூறின.

ஆனால், இதில் உண்மையென்னவெனப் பார்த்தால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கேஇதுகுறித்த மறைமுகப் பவர் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியென்றால், இந்தியாவில்எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம்பெட்ரோல் டீசல் விலைசிறிது நாட்களுக்கோசில மாதங்களுக்கோமாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில்அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா, சிக்கிம்மாநிலத் தேர்தல்களுக்கு ஒரு வாரத்துக்குமுன்னர் விலையில் மாற்றமில்லாமல் வைத்துக்கொண்டார்கள்.

2020ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத் தேர்தல் வந்தபோதும்அதற்குமுன்பாக ஒன்றரை மாத காலத்துக்கு பெட்ரோல் விலை மாறாமல்பார்த்துக்கொண்டார்கள். அதேபோல், மேற்கு வங்கத்துக்கு 2021ஆம் ஆண்டில் தேர்தல்வந்தபோதுதேர்தலுக்கு முந்தைய ஒரு மாத காலத்துக்கு பெட்ரோல் விலைமாறாமல் பார்த்துக்கொண்டார்கள். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து மாநிலத்தேர்தல் நடந்தபோதுதேர்தலுக்கு முந்தைய 4 மாதங்களுக்கு விலையேறாமல்பார்த்துக்கொண்டனர்.

தற்போது குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும்ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இதையெல்லாம் கவனிக்கும்போதுஇந்த விலையேற்ற இறக்கங்களில் பெட்ரோலியஅமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலையேற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய முடிகிறது. எனவே, தற்போது இரு மாநிலத் தேர்தல்களும் முடிவடைந்துள்ளநிலையில் இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe