Advertisment

உயரும் ரீசார்ஜ் கட்டணம்; பிள்ளையார் சுழி போட்ட ஜியோ

Rising recharge charges;jio announce

Advertisment

மாதாந்திர கட்டணத்தை உயர்த்தி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் 24-06-24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பின் முதலாவது முறையாக ஜியோ நிறுவனம் தங்களுடைய செல்போன் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம்அறிவித்துள்ளது. ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

ஜியோதற்போது தனது சேவை கட்டணத்தை அதிகரித்துபிள்ளையார் சுழிபோட்டநிலையில் அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பைவெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

network cellphone jio
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe