Advertisment

ஆர்.டி.ஐ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

தகவல் அறியும் உரிமை (RIGHT TO INFORMATION ACT)சட்ட திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் மற்றும் திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளிநடப்பு செய்தன. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆர்.டி.ஐ (RTI BILL) மசோதா நிறைவேறியது.

Advertisment

RIGHT TO INFORMATION BILL PASSED IN RAJYA SABHA IN PARLIAMENT

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். இதனால் மாநிலங்களவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Rajya Sabha passed bill RIGHT TO INFORMATION ACT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe