Skip to main content

ஜெகன்மோகன் - பவன்கல்யாண் இடையே வலுக்கும் மோதல்... ஆந்திர அரசியலில் பரபரப்பு...

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து அடுத்தடுத்த மக்கள் நல திட்டங்கள் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்று வந்தார். ஆனால் சமீபகாலமாக ஜெகனை சுற்றி சர்ச்சைகள் அதிகளவில் சூழ ஆரம்பித்துள்ளன எனலாம்.

 

rift between pawankalyan and jaganmohan reddy

 

 

அந்தவகையில் ஆந்திர அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அமல்படுத்தப்படும் என்ற அவரது அறிவிப்பு பல்வேறு தரப்புகளிலும் எதிர்ப்பை சம்பாதித்தது. அவரது இந்த முடிவை ஆந்திர மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பவன்கல்யாண் குறித்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாணுக்கு 3 திருமணங்கள் ஆகியுள்ளதாகவும், அதன் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாகவும், அவர்கள் எந்த மொழியில் கல்வி பயின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

பவன்கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் ஜெகன்மோகனின் பதில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. ஜெகனின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பவன்கல்யாண், ஜெகன் மோகன் ரெட்டி சிறைக்குச் சென்றதற்கும் எனது திருமணம்தான் காரணமா என கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் மத்தியிலுமான இந்த வார்த்தை போர் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான வழிகளில் சொத்து சேர்த்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“என்னைத் தாக்க முயற்சி நடக்கிறது” - ஆந்திராவை அலற வைத்த பவன் கல்யாண்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Pawan Kalyan allegation on andhra ruling party

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. 

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும், நிர்வாகத்திறன் குறித்து தெலுங்கு தேசம் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. அதே போல், தெலுங்கு தேச கட்சியை பற்றியும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. 

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்து போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. 

இந்த நிலையில், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னைத் தாக்க முயற்சி நடப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “என்னை சந்திக்க மக்கள் அதிக அளவில் வரும் போதல்லாம், என்னை தாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஒரு சிலர் பிளேடுகளுடன் கூட்டத்திற்குள் ஊடுருவி விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து பிடிப்பதே எனது பாதுகாப்பு டீமிற்கு முக்கிய வேலையாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 200 உறுப்பினர்களை அழைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வேன். அப்போது, உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும். அதே நேரம், பெரிய கூட்டங்களின் போது, என்னை தாக்க வேண்டும் என்பதற்காக சிலர் அடியாட்களை அமர்த்துகிறார்கள். அவர்கள்  தங்கள் கைகளில் பிளேடுகளை எடுத்து வந்து என்னை தாக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட இதுபோன்ற நிகழ்வு நடந்தது” என்று தெரிவித்தார். பவன் கல்யாணின் இந்த குற்றச்சாட்டு ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.