
உலகிலேயே மிகவும் பணக்கார பிச்சைக்காரராக இந்தியாவைச் சேர்ந்தஒருவர் இடம் பிடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பாரத் செயின் என்ற பிச்சைக்காரரின் மாத வருமானம் 60 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மும்பையில் மட்டும் இவருக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பெட்ரூம் கொண்ட பிளாட் ஒன்று உள்ளதாம். அதேபோல் தானேபகுதியில் சொந்தமாக இரண்டு கடைகள் இருக்கிறது. மாதம் 30 ஆயிரம் ரூபாய் வாடகையாகப் பெறுகிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதும் இவர் மும்பை தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள், தந்தை, சகோதரர்களுடன் வசித்து வரும் பாரத் செயின், மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினல், ஆசாத் மைதான பகுதிகளில் வழக்கமாக இவர் பிச்சை எடுக்கும் இடங்கள் என்று கூறப்படுகிறது.
Follow Us