உலகில் தினமும் நடைபெறும் விநோத சம்பவங்கள் இணையதளங்களில் வைரலாக்கப்படும் நிகழ்வு வழக்கமாக நடைபெறுகின்ற ஒரு சம்பவமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக்குட்டியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisment

பிரபல வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா வெளிட்டுள்ள அந்த வீடியோவில் காண்டாமிருகம் ஒன்ற நடந்து செல்கிறது. அப்போது அதற்கு பின்னால் சென்ற ஆட்டுக்குட்டி அதற்கு முன்னால் ஒடி நடனமாடியபடி திரும்பி வருகின்றது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த காண்டாமிருகம் தானும் பின்னால் திரும்பி ஆட்டுக்குட்டியுடன் இணைந்து இரண்டு ஸ்டெப் நடனம் ஆடியது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.