கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரைஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்பட்டு, உள்நாட்டு, வெளிநாட்டுவிமான சேவைகள்நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.