தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு; ஐந்து முக்கிய வழக்குகள் இன்று தீர்ப்பு?

N.V.RAMANA

உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் 6 ம் தேதி நாட்டின் 48 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற இவர் இன்று ஐந்து முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு அளிப்பார் எனவும் இலவசங்கள் தொடர்பான வழக்குக்கும் இன்று தீர்ப்பு அளிப்பர் எனவும்எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் போது அடுத்த நீதிபதியை பரிந்துரைப்பது வழக்கம். அதன் படி நீதிபதி என்.வி.ரமணா அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் என்பவரை நீதிபதியாகப் பரிந்துரைத்துள்ளார். பதவி மூப்பின் அடிப்படையில் தலைமை நீதிபதி பரிந்துரை செய்யப்படுவது வழக்கம். யு.யு.லலித் நவம்பர் 8ம் தேதி வரை மட்டுமே செயல்படுவர். அதன் பின் அவர் ஓய்வு பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் யு.யு.லலித் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் பதவியேற்பார்.

India supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe