தமிழ்நாட்டில் கரோனாஇரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதிகப்படியானதளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 19ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனாமூன்றாம் அலை தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில்,பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக,மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்பல்லாகடிதம் எழுதியுள்ளார். மலைப்பிரதேசங்களில் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல்மக்கள் கூடுவது அதிகரித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்தை, சுற்றுலாத்தலம் மற்றும் பொது இடங்களில் கரோனாவிதிகளை மக்கள் கடைப்பிடிப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். எப்பொழுதும் போலவே கரோனாபரிசோதனைகள் தொடர வேண்டும். கரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்தப்படாததுகண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவலைத் தடுக்க தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.