Published on 20/11/2018 | Edited on 20/11/2018

கர்நாடகாவில் வெளிவரும் பீமவதா என்ற கன்னட இதழ், தந்தை பெரியாரின் அட்டைப்படத்துடன், திராவிட நாட்டின் தந்தை பெரியாரின் பிறந்ததின சிறப்பிதழ் என்ற தலைப்பில் அவரை சிறப்பித்திருக்கிறது.
திராவிட நாடு எனப்படும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இன்றும் தந்தை பெரியாரால் தாங்கள் பெற்ற உரிமைகளை மறக்கவில்லை என்பதற்கு இதுவே சாட்சி என்று கர்நாடாகவில் உள்ள திராவிட இன உணர்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், அவரால் பெற்ற உரிமைகளை மறக்கடிக்க தமிழ்நாட்டில் சில பிரிவினர் படாதபாடு படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.