Advertisment

"உண்மைகள் விரைவாக வெளிக்கொண்டுவரப்படும் அதுவரை.." - இந்திய விமானப்படை வேண்டுகோள்!

bipin rawat

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் 08/12/2021 பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

Advertisment

இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை, முப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முப்படை விசாரணை குழுவும், இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில்இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. அவை பரப்பப்பட்டும்வருகிறது.

Advertisment

இந்தநிலையில்இந்திய விமானப்படை, உயிரிழந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் யூகங்களை தவிர்க்கலாம்என வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாகஇந்திய விமானப்படை, "டிசம்பர் 8 அன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிப்பதற்காக இந்திய விமானப்படை ஒரு முப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும். அதுவரை, இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் யூகங்களை தவிர்க்கலாம்" என கூறியுள்ளது.

indian air force bipin rawat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe