Skip to main content

"உண்மைகள் விரைவாக வெளிக்கொண்டுவரப்படும் அதுவரை.." - இந்திய விமானப்படை வேண்டுகோள்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

bipin rawat

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் 08/12/2021 பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

 

இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை, முப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முப்படை விசாரணை குழுவும், இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. அவை பரப்பப்பட்டும் வருகிறது.

 

இந்தநிலையில் இந்திய விமானப்படை, உயிரிழந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் யூகங்களை தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விமானப்படை, "டிசம்பர் 8 அன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிப்பதற்காக இந்திய விமானப்படை ஒரு முப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும். அதுவரை, இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் யூகங்களை தவிர்க்கலாம்" என கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

PM Modi inaugurated the International Air Show

 

பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 14வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமான தளத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

 

அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என முக்கியமானவர்கள் கலந்துகொண்டுள்ள இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் இந்த கண்காட்சியில் உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, வானில் சாகசங்களை நிகழ்த்தியது. 

 

இந்த கண்காட்சி மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

 

 

Next Story

புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்படும் பிபின் ராவத்தின் சிலை

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

statue former Tri-Army Commander Bipin Rawat sent from Puducherry Delhi

 

இந்தியாவின் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் நினைவைப் போற்றும் வகையில் 150 கிலோவில் ஐம்பொன் சிலை வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி புதுதில்லி ராணுவ தலைமையகத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பணிகளையும், அவரது நினைவையும் போற்றும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஐம்பொன் உருவ சிலை ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகருக்கு கொண்டுவரப்பட்டது. தெற்கு ரத வீதியில் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. இந்த உருவச்சிலை புதுச்சேரியில் இருந்து ரயில் மூலமாக டெல்லிக்கு அனுப்பப்பட்டு, டிசம்பர் மாதம் பத்தாம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனுமதியும் தற்போது கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதன்முறையாக ராணுவ வீரருக்காக உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலை எனவும் கூறப்படுகிறது.