Advertisment

இறுதிச் சடங்கு வரை வந்து நெகிழ்ச்சி; ஒரு குரங்கின் மனிதாபிமானம்

 Resilience leading up to the funeral; monkey incident

உணவளித்து வந்தவர் திடீரென உயிரிழந்த நிலையில் குரங்கு ஒன்று அவருடைய இறுதிச் சடங்கு நிகழ்வு நடக்கும் இடம் வரை வந்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராம் சுந்தர் சிங் என்பவர் குரங்கு ஒன்றுக்கு தினமும் உணவளிப்பதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக ராம்சுந்தர் சிங் உயிரிழந்தார். தினமும் தனக்கு உணவு கொடுப்பவர் வரவில்லை என்பதை அறிந்த அந்தக் குரங்கு அவர் இருப்பிட பகுதிக்கே வந்துள்ளது. உயிரிழந்த ராம் சிங் சுந்தர் சடலத்திற்கு அருகே அவர்களது உறவினர்கள் சோகமாக அமர்ந்திருக்க குரங்கும் அமர்ந்திருந்தது.அது மட்டுமல்லாது அவரது உடல் தகனம் செய்யப்பட்ட ஆற்றின் கரைப் பகுதிக்கும் குரங்கு சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

animals food uttarpradesh Monkey
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe