Advertisment

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பும்; பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியரும் - ரூ. 2000 நோட்டு அட்ராசிட்டி

reserve bank two thousand note incident lucknow petrol bunk 

Advertisment

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 2000ரூபாய் நோட்டுகள் செல்லும் என்பதால் பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர். அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோவில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வழக்கம் போல்வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது ஸ்கூட்டரில் பெட்ரோலை நிரப்பி விட்டு 2 ஆயிரம் ரூபாய்த் தாளை நீட்டி உள்ளார். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததுடன் 500 ரூபாய் நோட்டு இருந்தால் தாருங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பேட்ரோல்நிரப்பியவர், தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர், வாகனங்களில் இருந்து பெட்ரோலைஉறிஞ்சி எடுக்கும் உறிஞ்சுகுழாயை எடுத்து வந்து ஸ்கூட்டரில் இருந்த பெட்ரோல் முழுவதையும் உறிஞ்சு எடுத்துவிட்டார். பெட்ரோல் பங்க் ஊழியரின்இந்த செயலை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அங்குஇருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

lucknow
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe