Advertisment

‘ரூ.2,000 நோட்டுகள் 98.26% திரும்பப் பெறப்பட்டன’ - ரிசர்வ் வங்கி தகவல்

 Reserve Bank informed 98.26% of Rs. 2,000 notes have been withdrawn

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதனால், டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது.

Advertisment

மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், 98.26% ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது, ‘மே 19 2023ல் இருந்து ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ரூ.2,000 நோட்டுகள் சட்டப்படி செல்லும்’ எனத் தெரிவித்துள்ளது.

withdrawal rupees 2000 RBI RESERVE BANK OF INDIA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe