Skip to main content

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத நிதிக்கொள்கை கூட்டத்தில் ஆர்டிஜிஎஸ்(RTGS) மற்றும் என்இஎப்டி (NEFT), ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கவும் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Reserve Bank of India's Action to Increase Online Cash Flow


நடப்பு நிதியாண்டில் 3- வது நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதில் குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதத்தை 0.35 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனை தொடர்ந்து நாட்டில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றமான 'நெப்ட்' (NEFT- NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER) பரிமாற்றத்தை, அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் எந்தவித கட்டணமின்றி 24 மணி நேரமும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

Reserve Bank of India's Action to Increase Online Cash Flow

 

 


தற்போது உள்ள விதிமுறையின்படி, தேசிய மின்னணு நிதிப்பரிமாற்றமான 'நெப்ட்' யை (NEFT- NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER) பயன்படுத்தி 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது. வாடிக்கையாளர்கள் நெப்ட் மூலம் பணப்பரிவர்த்தனையை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே அனைத்து வேலை நாட்களில் பரிமாற்றம் செய்ய முடியும். இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நெப்ட் பரிமாற்றத்தைச் செய்ய முடியாது. இந்த நெப்ட் பரிமாற்றத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளர் ரூபாய் 2 லட்சம் வரை பரிமாற்றம் செய்யலாம். இந்நிலையில் தான் அனைத்து நாட்களிலும் பணப்பரிவர்த்தனையை நெப்ட் மூலம் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தாண்டில் வந்த புதிய மாற்றம்; ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
A Guide to Online Money Transactions to new rules

இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை தொடங்கி, செல்போன் ரீசார்ஜ், மின்கட்டணம்,வீட்டு வாடகை என பலவற்றுக்கும் ஆன்லைன் மூலமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், யுபிஐ பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2024 முதல் இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. 

அதன்படி, ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்களை செயலிழக்கச் செய்ய வேண்டுமென செயலிகளின் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, ஆன்லைன் பரிவர்த்தனை மோசடிகளை குறைக்கும் வகையில் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செயலிகள் மூலம் ரூ.2000க்கு மேல் தவறுதலாக ஒரு புதிய பயனாளருக்கு பணத்தை அனுப்பியிருந்தால் அதை நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும், ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகள் மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பரிமாற்ற கட்டணம், வணிக பரிமாற்றங்களுக்கு மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி ஏடிஎம்மில் எவ்வாறு டெபிட் அட்டை மூலமாக பணம் எடுக்க முடியுமோ அது போல நமது செல்போனில் உள்ள யுபிஐ கியுஆஇ கோடை ஸ்கேன் செய்து அதில் பணம் எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஐந்து விதிமுறைகளும் புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.

Next Story

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள்; ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Rs.2 thousand notes RBI Action Notification

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி புழக்கத்தில் இருந்த 3.42 லட்சம் கோடி மதிப்பிலான 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதே சமயம் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இதுவரை வங்கிகளுக்குத் திரும்ப வரவில்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, “2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில்  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையைத் திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, 1934 ஆம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகைகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் நிறைவேற்றப்பட்டது. அதனால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.