கடந்த ஜூன்- 6 ஆம் தேதி மும்பையில் ரிசர்வ் வங்கியின் (RBI) உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் RTGS, NEFT பண பரிவர்த்தனைக் கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ரிசர்வ் வங்கி ஜூலை 1 முதல் RTGS, NEFT கட்டணத்தை வங்கிகள் குறைக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் RTGS, NEFT கட்டணங்கள் எவ்வளவு குறையும் என்பது குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/re2.jpg)
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த கட்டணக் குறைப்பால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஜூலை 1 முதல் RTGS, NEFT ஆன்லைன் பண பரிவர்த்தனை கட்டணங்களை குறைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி (SBI BANK) NEFT பரிவர்த்தனை செய்ய 1 முதல் 5 ரூபாய் வரையிலும், RTGS பரிவர்த்தனை செய்ய 5 முதல் 50 ரூபாய் வரையிலும் கட்டணமாக வசூலிக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டணக்குறைப்பால் நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us