/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/supreme-court_15.jpg)
மஹாராஷ்ட்ராமாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, இடஒதுக்கீடுஎன்பது 50 சதவீதம்தான்இருக்க வேண்டும் என்ற விதிமுறையைமீறுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 8 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இடஒதுக்கீடு50 சதவீதத்தை தாண்டலாமா என விளக்கமளிக்குமாறு, உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பிறகு கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடஒதுக்கீடு இன்னும் எவ்வளவு நாட்கள் பின்பற்றப்படும் என கேள்வியெழுப்பியது.
இந்தநிலையில்மராத்தா இடஒதுக்கீட்டிற்குஎதிரான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், சில தவிர்க்கமுடியாதசூழ்நிலைகளில்இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தண்டலாம் என்றும், இந்திய அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையின்பாதுகாப்பு அதற்கு உண்டு எனவும் கூறினர். இதன்பிறகு இந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)