Skip to main content

புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
Request to provide 7.5 percent reservation for government school students in medical studies in Puducherry too!

 

புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சென்ற 15.09.2020 அன்று தமிழக சட்டப்பேரவையில் நீட்டில் தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. இச்சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரையில் தமிழக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மேற்சொன்ன இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்ததோடு கண்கலங்கி உள்ளார். மேலும், தமிழக ஆளுநரின் செயலர் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.  மேலும், இந்த இடஒதுக்கீடு சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரையில் மருத்துவப் படிப்பு  சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த போவதில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு கொண்டு வந்த பின்னால் புதுச்சேரியின் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவி மட்டும் நீட்டில் தேர்ச்சிப் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைப் பேர் நீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

புதுச்சேரியில் 2 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1570 மருத்துவ இடங்கள் உள்ளன. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு 50 சதவீத இடங்களைப் பெறுவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து வெறும் 33 சதவீத மருத்துவ இடங்களை மட்டுமே அரசு பெறுகிறது. மேலும், இதில் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு மருத்துவ இடங்களைக்கூட தருவதில்லை. இதனால், புதுச்சேரி மாணவர்கள் பெருமளவில் வஞ்சிக்கப்படுகின்றனர்.

எனவே, தமிழகத்தைப் போல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு நடத்த கூடாது. மேலும், அரசு ஒதுக்கீட்டிற்காக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடம் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற  வேண்டுமெனவும் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.