நாட்டின் 72- வது குடியரசுத் தின விழாவையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினார். இந்த நிகழ்வில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி, ராணுவ தளபதி, விமானப்படை தளபதி, கடற்படையின் தளபதி ஆகிய முப்படைகளின் தலைமை தளபதிகள் கலந்துக்கொண்டனர்.

Advertisment

மரியாதைச் செலுத்திய பின் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.