Advertisment

‘மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு’ - தேர்தல் ஆணையம் அதிரடி!

Repolling in Manipur Election Commission action

Advertisment

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் முதற்கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு நாளை மறுநாள் (26.04.2024) ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது.

இத்தகைய சூழலில் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிமையங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்வம், வாக்காளர்கள் மிரட்டல்,வாக்குப்பதிவுஇயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

Advertisment

இதனையடுத்து 47 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 11 வாக்குப்பதிவு மையங்களில் நாளை (22.04.2024) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தேர்தல் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

manipur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe