/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/863_2.jpg)
ரெப்போ விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் ரெப்போ உயர்வைஅறிவித்தார்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு நேரலை மூலம் இரு மாதத்திற்கான நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த இரு மாதத்திற்கான ரெப்போ விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி, அடுத்த இரு மாதத்திற்கான ரெப்போ விகிதம் 0.25% உயர்ந்து 6.50% ஆக இருக்கும் எனவும் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி 7% ஆக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6 ஆவது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த ரெப்போ வட்டி விகித உயர்வை அடுத்து வீடு வாகனங்களுக்கான கடன் வட்டிகளும் உயர வாய்ப்புள்ளது. வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் இரு மாத நாணயக் கொள்கைக் கூட்டம் என்பதோடு மட்டுமல்லாமல் மத்திய பட்ஜெட்டுக்குப் பின் நடக்கும் பின் நடக்கும் நாணய கொள்கைக் கூட்டம் என்பதால் இக்கூட்டத்தின் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)