Skip to main content

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு...

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Repo rate hike...

 

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் உயர்த்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.4 சதவிகிதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி கந்ததாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 5 மாதங்களில் 4 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பால் வீடு, வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதி மேலாண்மை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தாண்டில் வந்த புதிய மாற்றம்; ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
A Guide to Online Money Transactions to new rules

இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை தொடங்கி, செல்போன் ரீசார்ஜ், மின்கட்டணம்,வீட்டு வாடகை என பலவற்றுக்கும் ஆன்லைன் மூலமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், யுபிஐ பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2024 முதல் இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. 

அதன்படி, ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்களை செயலிழக்கச் செய்ய வேண்டுமென செயலிகளின் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, ஆன்லைன் பரிவர்த்தனை மோசடிகளை குறைக்கும் வகையில் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செயலிகள் மூலம் ரூ.2000க்கு மேல் தவறுதலாக ஒரு புதிய பயனாளருக்கு பணத்தை அனுப்பியிருந்தால் அதை நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும், ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகள் மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பரிமாற்ற கட்டணம், வணிக பரிமாற்றங்களுக்கு மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி ஏடிஎம்மில் எவ்வாறு டெபிட் அட்டை மூலமாக பணம் எடுக்க முடியுமோ அது போல நமது செல்போனில் உள்ள யுபிஐ கியுஆஇ கோடை ஸ்கேன் செய்து அதில் பணம் எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஐந்து விதிமுறைகளும் புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.

Next Story

ரூ. 1.4 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

1.4 crore issue 4 people incident including a BJP executive

 

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மாநில விவசாய அணியின் துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர், 70 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 1.4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

 

அந்தப் புகாரின் பேரில், பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட போரூரைச் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன், கே.கே. நகரைச் சேர்ந்த ராமு, வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேரிடம் இருந்து ரூ.1.01 கோடி ரொக்கப் பணம் மற்றும் 2 கார்கள், 2 செல்போன்கள் மற்றும் போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.