Advertisment

ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதில் சாவர்க்கர்? - இந்து மகா சபை கோரிக்கை

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, இந்து மகா சபையை நிறுவிய வி.டி.சாவர்க்கரின் படத்தை வைக்கவேண்டும் என இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

savarkar

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அந்தமான் சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டவர் வி.டி.சாவர்க்கர். இவர் அந்தமான் சிறையில் இருந்து வெளிவருவதற்காக, 1913ஆம் ஆண்டு பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மன்னிப்பு கடிதம் மற்றும் கருணை மனுக்களை எழுதியுள்ளார். ‘பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்’ என அவர் எழுதிய கடிதத்தின் சாராம்சம் பலராலும் இன்றளவும் விமர்சிக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், அகில பாரதிய இந்து மகா சபையின் சார்பில் வி.டி.சாவர்க்கரின் படத்தை, ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக வைக்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதேபோல், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ‘இந்துத்வா’ என்ற வார்த்தையை அறிமுகம் செய்த சாவர்க்கர், தொடர்ந்து காந்தியின் அரசியலை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

indian currency Mahatma Gandhi savarkar
இதையும் படியுங்கள்
Subscribe