Skip to main content

ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதில் சாவர்க்கர்? - இந்து மகா சபை கோரிக்கை

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, இந்து மகா சபையை நிறுவிய வி.டி.சாவர்க்கரின் படத்தை வைக்கவேண்டும் என இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
 

savarkar

 

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அந்தமான் சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டவர் வி.டி.சாவர்க்கர். இவர் அந்தமான் சிறையில் இருந்து வெளிவருவதற்காக, 1913ஆம் ஆண்டு பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மன்னிப்பு கடிதம் மற்றும் கருணை மனுக்களை எழுதியுள்ளார். ‘பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்’ என அவர் எழுதிய கடிதத்தின் சாராம்சம் பலராலும் இன்றளவும் விமர்சிக்கப்படுவதுண்டு. 
 

இந்நிலையில், அகில பாரதிய இந்து மகா சபையின் சார்பில் வி.டி.சாவர்க்கரின் படத்தை, ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக வைக்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதேபோல், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ‘இந்துத்வா’ என்ற வார்த்தையை அறிமுகம் செய்த சாவர்க்கர், தொடர்ந்து காந்தியின் அரசியலை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சபாநாயகர் உச்சரித்த பெயர்... சட்டென்று கிளம்பிய ஆளுநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The name pronounced by the speaker the governor who left suddenly

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இன்று (12.02.2023) காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 

Next Story

இரண்டு மொழிகளில் மட்டும் வெளியாகும் சாவர்க்கர் பயோ பிக்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Swatantrya Veer Savarkar release update

இந்துத்துவா மற்றும் வலது சாரி ஆதரவாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற சாவர்க்கரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியானது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. 'ஸ்வதந்த்ரா வீர் சாவர்கார்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்தீப் ஹூடா நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனந்த் பண்டிட் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்தை மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குவதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதில் நடிகரான ரன்தீப் ஹூடாவே இப்படத்தை இயக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ரன்தீப் ஹூடா. அப்போது இப்படம் கடந்த ஆண்டே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.

இந்த நிலையில் காந்தி இறந்த நாளான இன்று 'ஸ்வதந்த்ரா வீர் சாவர்கார்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி இந்தி மற்றும் மராத்தியில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோவை ரன்தீப் ஹூடா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.