ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல்வெளியாகியுள்ளது.
கடந்த 19ஆம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கக்கூடிய பகத்சிங் கோஷியாரி இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது. மராட்டிய ஆளுநரான பகத்சிங் கோஷியாரி மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில்பேசியதாக கடந்த நவம்பர் மாதம் புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டானது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் பிரதமரிடம் வலியுறுத்தியதாக அம்மாநிலஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.