ADVERTISEMENT

சீன செயலிகளை டெலீட் செய்யும் இந்தியச் செயலியை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்...

01:19 PM Jun 03, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT


ஸ்மார்ட்போன்களில் உள்ள சீன செயலிகள் கண்டறிந்து, அவற்றை நீக்கும் செயலி ஒன்றை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

ADVERTISEMENT


கரோனா வைரஸ் தொற்றுக்குப் பின் சீனாவுக்கு எதிரான மனநிலை உலகநாடுகள் அனைத்திலும் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில், இந்திய மக்கள் அனைவரும் சீன தயாரிப்புகளைத் தவிர்த்து இந்தியத் தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தும் இந்தியாவில் வலுத்து வருகிறது. இந்நிலையில், நமது ஸ்மார்ட்போன்களில் உள்ள சீன செயலிகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கும் வகையிலான செயலி ஒன்று அண்மையில் ப்ளே ஸ்டோரில் அறிமுகமானது.

கடந்த ஒரு மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ரிமூவ் சைனா ஆப்ஸ்' என்ற இந்தச் செயலி தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்த இந்தச் செயலி எதற்காக நீக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை கூகுள் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக் டாக் செயலுக்குப் போட்டியாக இருந்த 'மித்ரோன்' செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியது சர்ச்சையான நிலையில், தற்போது தற்போது இந்தச் செயலி நீக்கப்பட்டதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT