/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GOOGLE43434.jpg)
புதுச்சேரியில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் 55 செயலிகளை கூகுள் நிறுவனத்திருடன் பேசி பிளே ஸ்டோரில் இருந்து சைபர் கிரைம் காவல்துறையினர் நீக்கி உள்ளனர்.
புதுச்சேரியில் குறைந்த வருமானம் இருப்பவர்களை குறித்து வைத்து 2,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கடன் வழங்கும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் செயல்பட்டு வந்தன. எளிமையான முறையில் கடனை வழங்கிவிட்டு, பின்னர் அதிக வட்டி, அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், கடன் பெற்றவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்தனர்.
இது தொடர்பாக, புதுச்சேரி காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததால், இது குறித்து சைபர் கிரைம் காவலர்கள், விசாரித்தனர். விசாரணையில் இந்த கடன் செயலிகள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் உதவியுடன் கூகுள் நிறுவனத்தினருடன் பேசி 55 கடன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)