Remember Asifa? The same horror re-enacted

உத்தரப்பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர் கோவில் கருவறையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஐந்து வயது சிறுமி ஒருவர் கோவிலில் வைத்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தியையும், கோவிலில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சியையும் பத்திரிகையாளர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கொடூரத்தை நிகழ்த்திய பம்மி என்ற நபரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

Remember Asifa? The same horror re-enacted

Advertisment

கடந்த 2018 ஆம்ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜம்முவின் கத்துவா பகுதியில் இதேபோலஆசிபா என்ற 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கோவில் வைத்து பல நபர்களால் வைத்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அநேரத்தில்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதில் காவலர் ஒருவரும் சிறுமி ஆசிபாவை கொலை செய்து காட்டில் வீசும் இறுதி நேரத்தில் கூட பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாடே அதிர்ச்சிக்குள்ளான இந்த சம்பவத்தில் சஞ்சீராமின், அவரது மகன் விஷால், அவரது உறவுக்கார இளைஞன் சுபம் சங்கரா, காவல் அதிகாரி தீபக் கஜூரியா, சுரேந்தர் வெர்மா, பர்வேஷ் குமார் என பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.