Advertisment

கேரளாவிற்கு கொடுத்த நிவாரணத்தொகை 600 கோடி முன்பணம்தான்!! -மத்திய அரசு

KERALA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.

Advertisment

இந்நிலையில், மத்திய அரசையும் தாண்டி கேரளாவுக்கு பலர் நிவாரணம் அளிக்க முன் வந்துள்ளனர். அப்படி முன் வந்தவர்கள்தான் ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவு போன்ற வெளிநாடுகள். குறிப்பாகஐக்கிய அரபு அமீரகம் சுமார் 700 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது ஆனால் மத்திய அரசோ வெளிநாட்டு நிதிகளை பெறமறுப்பதால் மத்தியஅரசு வெளிநாட்டு நிதிகளை பெற்றுத்தர ஆவண செய்யவில்லை என்றால் மத்திய அரசேஅதற்கு தகுந்த நிதியை கேரளாவிற்கு தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது கேரள அரசு. இந்நிலையில் கேரளாவிற்கு கொடுக்கப்பட்ட 600 கோடி நிவாரண நிதி முன்பணம் அதாவது முதல்கட்ட நிதிஉதவிதான்மத்திய அமைச்சகங்கள் குழு நடத்து ஆய்விற்கு பிறகு அதன் அடிப்படையில் கேரளாவிற்குமேலும்நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசுதெரிவித்துள்ளது.

funds Central Government flood kerala flood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe