
வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் என பல மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், வெள்ளத்தால் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களுக்கு மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆவணங்கள் வழங்கப்படும். பல குடும்பங்களில் வெள்ளம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு விட்டது. யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Follow Us