ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 10, 362 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த தொகையை லாபமாக ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஈட்டியதைக் காட்டிலும் 9.8 சதவீதம் அதிகமாகும். ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனம் மூலம் 78.3 சதவீதம் லாபம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் மட்டும் ரூ.2,665 கோடி லாபம் ஈட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.