Advertisment

சபரிமலை விவகராத்தில் ரஹனா பாத்திமா கைது... 

rehana fathima

Advertisment

பெண்ணியவாதி ரஹனா பாத்திமா பத்தனம்திட்டா போலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்ததை அடுத்து சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தவர். பின்னர், பக்தர்களின் எதிர்ப்பால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பினார். சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஐபிசி 295 ஏ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதற்காக இவர் முன் ஜாமீனும் கோரி இருந்தார். ஆனால், இவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது கேரள உயர்நீதிமன்றம்.

இதனையடுத்து, ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரஹானா பாத்திமா பத்தனம்திட்டா போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

sabarimalai Kerala rehana fathima
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe