காரைக்காலில் பதிவுத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகாரில் சிபிஐ அதிகாரிகள் இருவரை கைது செய்த நிலையில் விடிய விடிய அவர்களது வீட்டில் சோதனை நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம்காரைக்காலில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பட்டா மாறுதல், பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. புகாரைத் தொடர்ந்து திடீரென சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் உதவி பதிவாளர் அலுவலகம், அவருடைய வீடு ஆகிய இடங்களிலும் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து உதவி பதிவாளர் சந்திரமோகன் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து குண்டுக்கட்டாக அழைத்துச் சென்றனர்.